"கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வெளி மாவட்டங்களில் இருந்து லாரிகள் வரவில்லை" - வெறிச்சோடிய கோயம்பேடு காய்கறி மார்க்கெட்

கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வெளி மாவட்டங்களில் இருந்து காய்கறி லாரிகள் வராததால், பெரும்பாலான கடைகள் அடைக்கப்ப்பட்டு, மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது.
கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வெளி மாவட்டங்களில் இருந்து லாரிகள் வரவில்லை - வெறிச்சோடிய கோயம்பேடு காய்கறி மார்க்கெட்
x
மக்கள் நலன் கருதி இரண்டு நாள் விடுமுறை வாபஸ் பெறப்படுவதாக நேற்று வியாபாரிகள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. விடுமுறை காலதாமதமாக வாபஸ் பெறப்பட்டதால் கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வெளிமாவட்டங்களில் இருந்து காய்கறிகள் ஏற்றி வரும் லாரிகள், எதுவும் வரவில்லை. இதனால் இன்றைய தினம் கோயம்பேடு மார்க்கெட்டில் புதிய காய்கறிகள் இல்லாமல் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் பொதுமக்கள் சில்லரை விற்பனையாளர்கள் வணிகர்கள் பெரும்பாலானோர் வராததால், கோயம்பேடு மார்க்கெட் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்