திருப்பூர் : பெண் போலீஸ் மீது தாக்குதல் நடத்திய மனநலம் பாதிக்கப்பட்ட நபரால் பரபரப்பு

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் கார் கண்ணாடிகளை அடித்து உடைத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் : பெண் போலீஸ் மீது தாக்குதல் நடத்திய மனநலம் பாதிக்கப்பட்ட நபரால் பரபரப்பு
x
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் கார் கண்ணாடிகளை அடித்து உடைத்தால் பரபரப்பு ஏற்பட்டது. மனு கொடுப்பது போல வந்த வீரபாண்டி என்ற நபர் திடீரென ஆட்சியர் அலுவலக வரவேற்பரையில் இருந்த டேபிள்  மற்றும் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தார். மேலும் கார் கண்ணாடிகளையும் அடித்து உடைத்த அவர், அங்கு பாதுகாப்பு பணியில் நின்றிருந்த பெண் போலீஸ் மீதும் சைக்கிள் சங்கிலியால் தாக்குதல் நடத்தினார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீரபாண்டியை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்தது. காவல் நிலையத்திற்கு அவரை அழைத்துச் சென்ற போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்