ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு 980 ரூபாய் சரிவு

தங்கம் விலை தொடர்ச்சியாக சரிந்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு 984 ரூபாய் குறைந்துள்ளது.
ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு 980 ரூபாய் சரிவு
x
தங்கம் விலை கடந்த வாரத்தில் சவரனுக்கு 2 ஆயிரம் ரூபாய் வரை விலை குறைந்த நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு 984 ரூபாய் சரிந்து 30 ஆயிரத்து 560 ஆக விற்பனையாகிறது. ஒரு கிராம் 3 ஆயிரத்து 820 ஆக குறைந்துள்ளது. காலையில் சவரனுக்கு 584 ரூபாய் விலை சரிந்த நிலையில், மாலை நிலவரப்படி 400 ரூபாய் சரிந்து வர்த்தகமாகிறது. கடந்த வார தொடக்கத்தில் ஒரு சவரன் 33 ஆயிரத்து 500 ரூபாய் வரை விற்பனையான நிலையில், தற்போது சுமார் 3 ஆயிரம் வரை விலை குறைந்துள்ளது. சர்வதேச அளவில் பங்குச் சந்தைகள் சரிந்துள்ள நிலையில், தங்க வர்த்தகத்திலும் ஏற்ற இறக்கமான நிலை ஏற்பட்டுள்ளது.  தங்கம் விலை குறைவால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில், விலை மேலும் குறையலாம் என தங்க நகை வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்