பானுடன் ஆதாரை இணைக்க மார்ச். 31 இறுதி நாள் - செயலற்ற பான் கார்டு பரிவர்த்தனைக்கு ரூ.10,000 அபராதம்

பான் அட்டையுடன் ஆதார் எண்ணை மார்ச் 31 ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என வருமான வரித்துறையின் கெடு முடிவடைகிறது
x
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை,  மார்ச் 31 ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என வருமான வரித்துறை உத்தரவிட்டிருந்தது. இந்த கெடு முடிவடைய உள்ள நிலையில் 17 புள்ளி 58 கோடி பேர் பான் எண்ணை இணைக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது. ஜனவரி 27, 2020 நிலவரப்படி சுமார் 30 புள்ளி 75 கோடி பேர் மட்டுமே பான் எண்ணுடன், ஆதாரை இணைத்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

இந்த தேதிக்குள் பான் எண்ணுடன் ஆதாரை இணைக்கவில்லை என்றால், பான் எண் செயலற்றதாகிவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பான் கார்டு செயலிழந்தால், 18 விதமான பரிவர்த்தனைகளை செய்வதில் சிக்கல் ஏற்படும் என்கின்றனர் ஆடிட்டர்கள்.

செயலிழந்த பான் எண் கொண்டு பரிவர்த்தனைகள் செய்யும்பட்சத்தில், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் பான் அட்டையை அடையாள அட்டையாக பயன்படுத்துவதற்கு எந்த தடையுமில்லை என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.




Next Story

மேலும் செய்திகள்