போலி ஆவணம் தயாரித்து நிலம் அபகரிப்பு - ஒருவர் கைது

சென்னையில் ஆள்மாறாட்டம் செய்து நில அபகரிப்பில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
போலி ஆவணம் தயாரித்து நிலம் அபகரிப்பு - ஒருவர் கைது
x
சென்னையில் ஆள்மாறாட்டம் செய்து நில அபகரிப்பில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர். அமெரிக்காவில் வசித்து வரும்  சரஸ்வதி என்பவர்,  திருநீர்மலையில் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பில் நிலம்  வாங்கியுள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த நிலம் முறைகேடாக விற்பனை செய்யபட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். இதேபோல்  பெங்களூரைச் சேர்ந்த சுனிஜித் கிருஷ்ணமூர்த்தி என்பவரும் பல்லாவரத்தில் உள்ள தனது நிலம் முறைகேடாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக புகார் அளித்தார். இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்த சுரேஷ் என்பவரை கைது செய்தனர். அவர், போலி ஆவணங்கள் தயாரித்து நிலங்களை விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக மேலும் சிலரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்