இயற்கை உபாதை கழிக்க சென்ற சிறுமி கூட்டு பலாத்காரம்

இயற்கை உபாதை கழிக்க ஆற்றுப்பகுதிக்கு சென்ற 12 வயது சிறுமி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இயற்கை உபாதை கழிக்க சென்ற சிறுமி கூட்டு பலாத்காரம்
x
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த மேட்டுப்பாளையத்தை சேர்ந்த, அந்த 12 வயது சிறுமி பெற்றோரை இழந்து காப்பாளரின் கண்காணிப்பில் வளர்ந்து வந்துள்ளார். வீட்டில் கழிவறை வசதி இல்லாத‌தால் இயற்கை உபாதை கழிக்க பாலாற்று பகுதிக்கு சென்ற சிறுமியை, 3 பேர் வாயை பொத்தி தூக்கி சென்று பலாத்காரம் செய்துள்ளனர். கூச்சலிட முயன்ற சிறுமியை அந்த கும்பல் பீர் பாட்டிலை உடைத்து குத்தி கொன்றுவிடுவதாக மிரட்டி வன்கொடுமை செய்துள்ளனர். ஆடைகள் கிழிக்கப்பட்ட அலங்கோலமாக வீசப்பட்ட சிறுமி, சுடுகாட்டில் சடலத்தின் மீது போர்த்த பயன்படுத்தப்பட்ட ஆடைகளை எடுத்து சுற்றிகொண்டு, தனது வீட்டிற்கு சென்றுள்ளார். சிறுமிக்கு நேர்ந்த கொடுமையை கேட்ட காப்பாளர்,  வாணியம்பாடி கிராமிய காவல்நிலையத்தில் புகார் அளிக்க, சந்துரு , பார்த்திபன், கண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 


Next Story

மேலும் செய்திகள்