தமிழக மக்களுக்கு பிரச்சினை ஏற்பட்டால், பொறுத்துக் கொள்ள மாட்டேன் - விஜயகாந்த்

தமிழக மக்களுக்கு பிரச்சினை ஏற்பட்டால், நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன் என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்தார்.
தமிழக மக்களுக்கு பிரச்சினை ஏற்பட்டால், பொறுத்துக் கொள்ள மாட்டேன் - விஜயகாந்த்
x
தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் உலக மகளிர் தின பொதுக்கூட்டம் மதுரை திருப்பரங்குன்றத்தில் நடைபெற்றது. இதில் அந்த கட்சியின் நிறுவனரும், பொதுச்செயலாளருமான விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா, துணை செயலாளர் எல்.கே.சுதிஷ், விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் பேசிய விஜயபிரபாகரன், தேமுதிகவின் திட்டங்களை கூறினால், பக்கத்து மாநில முதல்வர்கள் காப்பி அடித்து விடுவார்கள் என்றார். நல்ல தலைவனை, மிகச்சிறந்த தலைவனை 15 வருடங்களாக இழந்தது தமிழக மக்கள் தான் என்று கூறிய அவர், ஆட்சியில் விஜயகாந்த் அமர்ந்தால் தமிழகம் வல்லரசாக மாறும் என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய விஜயகாந்த், தமிழக மக்களுக்கு பிரச்சினை ஏற்பட்டால், நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன் என்றார். 

Next Story

மேலும் செய்திகள்