ஓ.பி.சி. கணக்கெடுப்பு விவகாரம் : "வாக்குறுதியில் இருந்து பின்வாங்குகிறது மத்திய அரசு" - பாமக நிறுவனர் ராமதாஸ்

2021ம் ஆண்டு நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பை ஓபிசி கணக்கெடுப்பாக நடத்தப்படும் என உறுதி அளித்திருந்த நிலையில், மத்திய அரசு அதிலிருந்து பின்வாங்குவது சமூகநீதிக்கு இழைக்கப்படும் துரோகம் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ஓ.பி.சி. கணக்கெடுப்பு விவகாரம் : வாக்குறுதியில் இருந்து பின்வாங்குகிறது மத்திய அரசு - பாமக நிறுவனர் ராமதாஸ்
x
2021ம் ஆண்டு நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பை ஓபிசி கணக்கெடுப்பாக நடத்தப்படும் என உறுதி அளித்திருந்த நிலையில், மத்திய அரசு அதிலிருந்து பின்வாங்குவது சமூகநீதிக்கு இழைக்கப்படும் துரோகம் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  மத்திய அரசின் ஆவணங்களின்படி இந்தியாவில் 6 ஆயிரத்து 285 சாதிகள் மட்டுமே உள்ள நிலையில், மாநில அரசுகள் தயாரித்துள்ள பட்டியலில் 7 ஆயிரத்து 200 சாதிகள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மீண்டும்  சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதன் மூலம் தான் இந்த குழப்பங்களுக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்