"கொரோனா வைரஸ் - முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்" - அமைச்சர் விஜயபாஸ்கர்

மஸ்கட்டில் இருந்து தமிழகம் திரும்பிய ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
கொரோனா வைரஸ் - முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
x
சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், மஸ்கட்டில் இருந்து தமிழகம் திரும்பிய ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் சஞ்ஜீவ் குமார் கூறுகையில், இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளதாக கூறினார். ஓமனில் இருந்து தமிழகம் திரும்பிய ஒருவருக்கும், ஈரானில் இருந்து லடாக் திரும்பிய இருவருக்கும், கொரோனா தொற்று உள்ளது ​என்றும் அவர் தெரிவித்தார். இதனிடையே, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள பதிவில், 45 வயதுடைய அந்த நபர், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்களின் தீவிர காண்காணிப்பில் உள்ளாத தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் எனவும், அதில் குறிப்பிட்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்