அதிகாரிகள் குடியிருப்பில் நின்ற வாகனத்தில் தீ விபத்து - தீயை போராடி தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்
வாணியம்பாடியில் அரசு அதிகாரிகள் குடியிருப்பு அருகே நின்ற மினிவேன் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வாணியம்பாடியில் அரசு அதிகாரிகள் குடியிருப்பு அருகே நின்ற மினிவேன் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து, அங்குள்ள வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு அருகே நிறுத்தி வைத்துள்ளனர். அதில் பழுதடைந்த நிலையில் இருந்த மினிவேன் ஒன்று, நேற்றிரவு திடீரென தீப்பற்றி எரிந்தது. தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், பற்றி எரிந்த தீயை போராடி அணைத்தனர்.
Next Story