ஜெயின் கோயிலில் திருடு போன பழமையான சிலைகள - 4 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை

தஞ்சாவூர், கரந்தை பகுதியில் உள்ள ஜைன கோயிலில், இருந்த 22 சிலைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
ஜெயின் கோயிலில் திருடு போன பழமையான சிலைகள - 4 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை
x
தஞ்சாவூர், கரந்தை பகுதியில் உள்ள ஜைன கோயிலில், இருந்த 22 சிலைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதையடுத்து உதவி ஆய்வாளர்  தலைமையில் தனிப்படை அமைத்த போலீசார், குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். கண்காணிப்பு கேமரா காட்சிகள் அடிப்படையில், கரந்தையை சேர்ந்த சரவணன் என்கிற ராஜேஷை  போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவல் மூலம் கரந்தையைச் சேர்ந்த சண்முகராஜன், சுங்கான்திடல் பெரிய தெருவைச் சேர்ந்த ரவி, நாகை கீழ்வேளூர் பிராதபுரத்தைச் சேர்ந்த விஜயகோபால் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். ராஜேஷ் வீட்டில் பதுக்கி வைத்திருந்த  22 உலோகச் சிலைகளும் மீட்கப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்