ஆதித்தனார் கல்லூரியில் 55-வது கல்லூரி நாள் விழா நடைபெற்றது

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 55-ஆம் ஆண்டு கல்லூரி நாள் விழா நடைபெற்றது.
ஆதித்தனார் கல்லூரியில் 55-வது கல்லூரி நாள் விழா நடைபெற்றது
x
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 55-ஆம் ஆண்டு கல்லூரி நாள் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கல்லூரி  முதல்வர் மகேந்திரன் ஆண்டறிக்கை வாசித்தார். தொடர்ந்து, கல்லூரி ஆண்டு மலரை, கல்லூரி செயலாளர் ஜெயக்குமார்  வெளியிட, அதனை சிறப்பு விருந்தினரான கலந்துகொண்ட சென்னை வருமான வரி மேல்முறையீட்டு நீதித்துறை உறுப்பினர் கணேசன் பெற்றுக்கொண்டார். பின்னர், முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியர்களுக்கு பதக்கங்களும், கல்வி மற்றும் விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. விழாவின் முடிவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியை, மாணவர்களின் பெற்றோர் மற்றும் பேராசிரியர்கள் கண்டுகளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்