பேராசிரியர் க.அன்பழகன் இறுதி ஊர்வலம் - திமுகவினர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்பு

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
பேராசிரியர் க.அன்பழகன் இறுதி ஊர்வலம் - திமுகவினர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்பு
x
உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் இன்று அதிகாலை உயிரிழந்தார். கீழ்பாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார், மற்றும் துரைமுருகன், கே.எஸ்,அழகிரி, அன்புமணி ராமதாஸ், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இதனைத்தொடர்ந்து  பிற்பகல் சுமார் 4 மணியளவில் கீழ்பாக்கம் இல்லத்தில் இருந்து நியூ ஆவடி சாலையில் உள்ள வேலங்காடு இடுகாடு நோக்கி இறுதி ஊர்வலம் தொடங்கியது. 


Next Story

மேலும் செய்திகள்