கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த கூட்டம் : "தீவிர கண்காணிப்பில், சீனாவில் இருந்து வந்த 30 பேர்" - சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்

கிருஷ்ணகிரியில் சுகாதாரத் துறை சார்பில், கொரானா வைரஸ் போர்க்கால தடுப்பு நடவடிக்கை குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.
கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த கூட்டம் : தீவிர கண்காணிப்பில், சீனாவில் இருந்து வந்த 30 பேர் - சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்
x
ஆட்சியர் பிரபாகர் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், மருத்துவ அலுவலர்கள், நகராட்சி ஆணையர்கள், பூச்சியல் வல்லுனர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ​அவர்களுக்கு, கை கழுவும் முறை மற்றும் தொற்று நீக்கம் குறித்து கூட்டத்தில் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து பேசிய சுகாதாரத்துறை அதிகாரிகள், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து மேற்படிப்பு மற்றும் பணி காரணமாக சீனா சென்று திரும்பிய 30 பேர், தீவிரமாக கண்காணிப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்