வார்டு மறுவரையறை குறித்த கருத்துக்கேட்பு கூட்டம் : செல்போனில் மூழ்கிய அரசு அதிகாரிகள்

வேலூரில் மாநில தேர்தல் ஆணையர் பங்கேற்ற கருத்துக்கேட்பு கூட்டத்தில், அரசு அதிகாரிகள் அலட்சியமாக செல்போனில் மூழ்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வார்டு மறுவரையறை குறித்த கருத்துக்கேட்பு கூட்டம் : செல்போனில் மூழ்கிய அரசு அதிகாரிகள்
x
வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில், வார்டு மறுவரையறை குறித்து கருத்துக்கேட்பு கூட்டம், மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஆட்சியர் சண்முகசுந்தரம் மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் பங்கேற்ற அரசியல் கட்சியினரும், பொதுமக்களும், வார்டு மறுவரை குறித்தும், வாக்குச்சாவடிகள் அமைப்பது குறித்தும், தங்களது கருத்துக்களை தெரிவித்துக்கொண்டிருந்தனர். அப்போது, பெண் அதிகாரி ஒருவர், செல்போனில் கேம் விளையாடி கொண்டும், மற்றொருவர் இணையதளத்தில், பொருட்களை ஆர்டர் செய்தும் கொண்டுமிருந்தனர். அரசு அதிகாரிகளின் அலட்சியப்போக்கு, கூட்டத்தில் பங்கேற்றவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Next Story

மேலும் செய்திகள்