திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் காலமானார்

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்.
திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் காலமானார்
x
மூச்சுத்திணறல் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதியன்று   சென்னை அப்பலோ மருத்துவமனையில் அன்பழகன் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 1 மணியளவில் அவர் காலமானார். 97 வயதான  அன்பழகன், கடந்த 43 ஆண்டுகளாக தொடர்ந்து திமுக பொதுச்செயலாளராக இருந்து வந்தார். 9 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒருமுறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ள அன்பழகன், திமுக ஆட்சியின்போது கருணாநிதி அமைச்சரவையில் சமூக நலம், மக்கள் நல்வாழ்வு, கல்வி மற்றும் நிதித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்துள்ளார். 

அன்பழகன் மறைவு செய்தியை அறிந்ததும் உடனடியாக திமுக தலைவர் ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அவருடன் திமுக பொருளாளர் துரைமுருகன், கே.என்.நேரு, டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகளும் அன்பழகனுக்கு அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, அன்பழகனின் உடல், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு அதிகாலை 2.30 மணி அளவில் எடுத்துச் செல்லப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்