கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் கடிதம்

கொரோனா பாதிப்பை தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு, தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.
x
அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் கே.சண்முகம் எழுதியுள்ள கடிதத்தில், மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்களின் கூட்டத்தை கூட்டி ஆய்வு செய்ய அறிவுறுத்தி உள்ளார். 

* கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் முறை, மருத்துவமனை சூழல், ஆம்புலன்ஸ் பயன்பாடு, சிகிச்சை குறிப்புகள், போக்குவரத்து அறிவுறுத்தல் குறித்து செயல் திட்டம் வகுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 

* கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டதாக கருதப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க மாவட்ட தலைமை மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், பல்நோக்கு உயர்சிகிச்சை தனியார் மருத்துவமனைகளில்  தனி வார்டு அமைக்க  வேண்டும் எனவும் தலைமை செயலாளர் அறிவுறுத்தி உள்ளார்.

* இந்த வார்டுகளுக்கு செல்லும் நோயாளிகள், உதவியாளர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் 70 சதவீதம் ஆல்கஹால் கொண்ட சுத்தப்படுத்தும் திரவங்கள் உதவியுடன் கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார், 

* மாவட்ட அளவில் மத்திய, மாநில அரசு துறைகளின் ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்க வேண்டும் என தலைமை செயலாளர் அறிவுறுத்தி உள்ளார். 

* கொரோனா வைரஸ் தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுகாதாரத்தை பேணவும் அவர் அறிவுறுத்தி உள்ளார். 

* கைகளை சுத்தப்படும் திரவங்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இலவசமாக வைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் அறிவுறுத்தி உள்ளார். 

* கிராமங்களில்  கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் தடுக்க தேவையான நடவடிக்கை  எடுக்கவும், அதற்கான விழிப்புணர்வை அதிகரிக்க தேவையான நடவடிக்கை எடுக்கவும்  தலைமை செயலாளர் சண்முகம் கேட்டுக்கோண்டுள்ளார்

* இந்த பணிகளை தினம்தோறும் கண்காணிக்க வேண்டும் எனவும் ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்