5-வது டி.என்.பி.எல் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு

5-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் இருபது ஓவர் கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணையை, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ளது.
x
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர், வரும் ஜூன் 10ஆம் தேதி தொடங்கி, ஜூலை 12ஆம் தேதி வரை, நெல்லை, திண்டுக்கல், கோவை, சேலம் ஆகிய 4 இடங்களில் நடைபெற உள்ளது. இந்த தொடரில், நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன.

* ஜூன் 10ஆம் தேதி கோவை எஸ்.என்.ஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில், ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியும், ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியும் மோதுகின்றன. லீக் போட்டிகள் ஜூலை 5ஆம் தேதி வரை நடைபெறும் நிலையில், முதல் அரையிறுதி போட்டி, ஜூலை 8ஆம் தேதி திண்டுக்கல்லிலும், 2-வது அரையிறுதி போட்டி, ஜூலை 10ஆம் தேதி நெல்லையிலும் நடைபெறுகிறது. இதனை  தொடர்ந்து, சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும்  இறுதிப்போட்டி, ஜூலை12ஆம் தேதி நெல்லையில் நடைபெறுகிறது.

Next Story

மேலும் செய்திகள்