புதிய அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை- அடிக்கல் நாட்டினார், முதலமைச்சர் பழனிசாமி

தமிழகத்திற்கு கூடுதல் மருத்துவ இடங்களை பெற்று தந்த அரசு, அதிமுக அரசு என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
புதிய அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை- அடிக்கல் நாட்டினார், முதலமைச்சர் பழனிசாமி
x
கிருஷ்ணகிரியில் புதிய அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் அடிக்கல் நாட்டினர். போலுபள்ளி என்ற இடத்தில் 25 ஏக்கர் பரப்பளவில் 339 கோடி மதிப்பில், 500க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகளுடன் இந்த மருத்துவமனை அமைய உள்ளது. 2021-2022 ஆம் கல்வி ஆண்டில், 150 மருத்துவ மாணவர்களை இந்த கல்லூரியில் சேர்க்க  திட்டமிடப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்கள், செவிலியர்களுக்கான தனி விடுதிகளும், 22 சிகிச்சை பிரிவுகளும் தொடங்கப்பட உள்ளன. விழாவில் பேசிய முதலமைச்சர், கடந்த 9 ஆண்டுகளில் சுகாதார துறைக்கு 75 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார். மேலும், அதிமுக ஆட்சியில் தான், மருத்துவ இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்