டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு முறைகேடு விவகாரம்: தேர்வு அறிவிப்பு - வெளியிட தயங்கும் டி.என்.பி.எஸ்.சி

குரூப்-4 மற்றும் குரூப்-2 தேர்வு முறைகேடு காரணமாக, புதிய தேர்வுகளுக்கான அறிவிப்புகளை வெளியிடுவதில் டி.என்.பி.எஸ்.சி தயக்கம் காட்டி வருகிறது.
டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு முறைகேடு விவகாரம்: தேர்வு அறிவிப்பு - வெளியிட தயங்கும் டி.என்.பி.எஸ்.சி
x
வருடாந்திர தேர்வு கால அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி வெளியிடுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான அட்டவணையின்படி, ஜனவரி மாதத்தில் குரூப்-1 தேர்வு, உதவி வேளாண் விரிவாக்க அலுவலர் தேர்வு, தோட்டக்கலை உதவி இயக்குநர் தேர்வு மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் தேர்வு ஆகிய 4 தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்க வேண்டும். இதில், குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு மட்டுமே ஜனவரி 20-ல் வெளியிடப்பட்டு ஆன்-லைன் விண்ணப்பம் நிறைவடைந்தது. மற்ற 3 தேர்வுகளுக்கான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. பிப்ரவரி மாதத்தில் வந்திருக்க வேண்டிய ஒருங்கிணைந்த பொறியாளர்  பணி தேர்வுக்கும், அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. மார்ச் மாதத்திற்கான அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை.
குரூப்-4 மற்றும் குரூப் 2  தேர்வு முறைகேடு விவகாரம் காரணமாக, புதிய தேர்வுகளுக்கான அறிவிப்புகளை வெளியிடுவதில் தேர்வாணையம் தயக்கம் காட்டி வருவதாக  டிஎன்பிஎஸ்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Next Story

மேலும் செய்திகள்