தொடங்கியது 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - 8.16 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்பு

12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கியுள்ளன.
தொடங்கியது 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - 8.16 லட்சம் மாணவ, மாணவிகள் பங்கேற்பு
x
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து மொத்தம் 8 புள்ளி 16லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். இதே போல, வேலூர்,  சேலம், கோவை, மதுரை உள்ளிட்ட மத்திய சிறைகளில் இருந்தும், 62 சிறைவாசிகள் தேர்வு எழுதுகின்றனர்.  கடந்த ஆண்டு ஒவ்வொரு பாடத்திற்கும் 200 மதிப்பெண்கள் என மொத்தம் ஆயிரத்து 200 மதிப்பெண்களுக்கு தேர்வு நடந்து வந்த நிலையில், இந்த ஆண்டு, ஒவ்வொரு பாடத்திற்கும் 100 மதிப்பெண்கள் என மொத்தம் 600 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறுகிறது. தேர்வு முடிவுகள், ஏப்ரல் 24 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது. தேர்வு முறைகேடு குறித்து புகார் தெரிவிக்க, சென்னையில் உள்ள தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை, கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரத்யேக செல்போன் எண்களும் வழங்கப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்