நாகையில் மணியம்மை நூற்றாண்டு விழா - மூட நம்பிக்கைகளுக்கு எதிராக பிரச்சாரம்

மணியம்மை நூற்றாண்டு விழா நாகை மாவட்டம் கீழ்வேளூரில் நேற்று நடைபெற்றது.
நாகையில்  மணியம்மை நூற்றாண்டு விழா - மூட நம்பிக்கைகளுக்கு எதிராக பிரச்சாரம்
x
மணியம்மை  நூற்றாண்டு விழா நாகை மாவட்டம் கீழ்வேளூரில் நேற்று நடைபெற்றது. திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் தலைமையில் நடைபெற்ற பேரணியில் தப்பாட்டம் இசைத்தவாறு, பெண்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. அதனை தொடர்ந்து மூட நம்பிக்கைக்கு எதிராக திராவிடர் கழகத்தை சேர்ந்த பெண்கள் வெறும் கையில் தீ சட்டியை ஏந்தியவாறும், ஆண்கள் இருவர் முதுகில் அழகு குத்தியபடி காரை இழுத்து வந்தும், கடவுள் மறுப்பு கோஷங்களை எழுப்பினர்.  சிறந்த சமூக சேவை செய்து வரும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 100 பெண் போராளிகளுக்கு மணியம்மையார் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்