தண்ணீர்,இரை தேடி இடம்பெயரும் பறவைகள்: வனத்துறைக்கு - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

ஓமலூர் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள பறவைகள் இடம் பெயர்வதை தடுக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தண்ணீர்,இரை தேடி இடம்பெயரும் பறவைகள்: வனத்துறைக்கு - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
x
கடும் வெயிலால், சேலம் மாவட்டம் ஓமலூர் சுற்று வட்டாரத்தில் உள்ள நீர் நிலைகள், வறண்டு காணப்படுகின்றன. நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெப்பத்தினால், அங்குள்ள பறவைகள் தண்ணீர் மற்றும் இரை தேடி விவசாய வயல்களில் இறங்கி உள்ளன.  இவ்வாறு வரும் மயில், நாரை, கொக்கு உள்ளிட்ட பறவைகளுக்கு மனிதர்கள் மற்றும் மற்ற உயிரினங்களால் அச்சுறுத்தல் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.  இதே நிலை நீடித்தால் பறவைகள் அனைத்தும், வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்து சென்றுவிடும் நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே, பறவையினங்கள், அங்கேயே  தங்கி வாழ்வதற்கான நடவடிக்கைகளை வனத்துறை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்