ஈரானில் வேகமாக பரவி வரும் கொரோனா : மீன் பிடிக்க முடியாமல் சிக்கி தவிக்கும் தமிழக மீனவர்கள்

கொரோனா பரவும் ஈரானிலிருந்து விரைந்து தங்களை மீட்குமாறு தமிழக மீனவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரானில் வேகமாக பரவி வரும் கொரோனா : மீன் பிடிக்க முடியாமல் சிக்கி தவிக்கும் தமிழக மீனவர்கள்
x
ஈரானில் கொரோனா பரவும் நிலையில், கீஸ் துறைமுகத்தில் மட்டும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாமல் தவிப்பதாக கூறியுள்ளனர். விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் தாய்நாடு திரும்ப இயலாத நிலையில் உணவு பொருட்கள் கூட கிடைக்கவில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். தங்கள் பகுதியில் கொரோன பரவும் சூழல் நிலவுவதால் தங்களை காப்பாற்றுமாறு மீனவர்கள், தங்கள் உறவினர்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் வீடியோ பதிவு செய்து, அனுப்பிய வண்ணம் உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்