தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் உயிரிழப்பு : சட்டசபையில் தி.மு.க.வின் பலம் என்ன?

தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இரண்டு பேர் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில் தி.மு.க.வின் பலம், தமிழக சட்டப்பேரவையில் 98 ஆக குறைந்துள்ளது.
தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் உயிரிழப்பு : சட்டசபையில் தி.மு.க.வின் பலம் என்ன?
x
* தி.மு.க.வைச் சேர்ந்த திருவொற்றியூர் எம்.எல்.ஏ. சாமி மற்றும் குடியாத்தம் எம்.எல்.ஏ. காத்தவராயன் ஆகியோர், அடுத்தடுத்த நாட்களில் உடல் நலக் குறைவால் உயிரிழந்தனர்.

* தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் மறைவுக்குப் பிறகு, தமிழக சட்டப் பேரவையில் அரசியல் கட்சிகளின் பலத்தை பார்க்கலாம்...  

* தற்போது, அ.தி.மு.க. உறுப்பினர்கள் - 124 பேர் உள்ளனர். தி.மு.க. உறுப்பினர்களின் எண்ணிக்கை  98 ஆக குறைந்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 7 உறுப்பினர்களும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒரு உறுப்பினரும் உள்ளனர். சுயேட்சை உறுப்பினராக டி.டி.வி.தினகரன் உள்ளார். 

* இதனை தவிர, சபாநாயகர் மற்றும் நியமன உறுப்பினர் ஒருவரும் உள்ளனர். தற்போது உறுப்பினர் காலியிடம்  2 ஆக உள்ளது. 

* தற்போது 2 உறுப்பினர்கள் மறைவை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு,  
இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தெரியப்படுத்துவார். இதனை தொடர்ந்து, இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி கொடுத்தால் ஆறு மாதத்திற்குள் திருவொற்றியூர், குடியாத்தம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும்.

Next Story

மேலும் செய்திகள்