வேலை வாங்கி தருவதாக கூறி, பண மோசடி : தலைமறைவாக இருந்த நபரை கைதுசெய்த போலீசார்

வங்கியில் வேலை வாங்கி தருவதாக கூறி, பல லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்த நபரை போலீசார் கைதுசெய்தனர்.
வேலை வாங்கி தருவதாக கூறி, பண மோசடி : தலைமறைவாக இருந்த நபரை கைதுசெய்த போலீசார்
x
வங்கியில் வேலை வாங்கி தருவதாக கூறி, பல லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்த நபரை போலீசார் கைதுசெய்தனர். சென்னை பெருமாள்பேட்டையை சேர்ந்த ராஜ்பரத் என்பவர், தனியார் வங்கியில் வேலைவாங்கி தருவதாக கூறி, பழவந்தாங்கலை சேர்ந்த பிரதீப்குமாரிடம்13 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். நீண்ட நாட்களாகியும் வேலை வாங்கி தராததால், அவர் மீது பிரதீப்குமார், வேப்பேரி போலீசில் புகார் அளித்தார். இதேபோன்று மகேஷ் என்பவரிடம் 6 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்ததாக ராஜ்பரத் மீது புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப் பதிந்து தேடிவந்த போலீசார், தலைமறைவாக இருந்த ராஜ்பரத்தை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்