பீட்சா டெலிவரி செய்பவரிடம் நடிகை தகராறு : நடிகையின் எண்ணை ஆபாச குரூப்பில் பகிர்ந்த நபர்

பல்வேறு எண்களில் இருந்து தன்னை தொடர்பு கொண்டு சிலர் ஆபாசமாக பேசுவதாக, நடிகை காயத்ரி சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
பீட்சா டெலிவரி செய்பவரிடம் நடிகை தகராறு : நடிகையின் எண்ணை ஆபாச குரூப்பில் பகிர்ந்த நபர்
x
பல்வேறு எண்களில் இருந்து தன்னை தொடர்பு கொண்டு சிலர் ஆபாசமாக பேசுவதாக, நடிகை காயத்ரி சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், பீட்சா டெலிவரி செய்யும் பரமேஸ்வரன் என்பவரை பிடித்து விசாரித்தனர். அப்போது சில தினங்களுக்கு முன்பு, காயத்ரி வீட்டிற்கு பீட்சா டெலிவரி செய்ய சென்றபோது, அவர் திட்டியதால், ஆத்திரத்தில் அவரது எண்ணை ஆபாச குரூப்பில் பகிர்ந்ததாக ஓப்புக்கொண்டார். இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்யும் நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்