பங்காரு அடிகளார் - லட்சுமி பங்காரு அடிகளார் சதாபிஷேக விழா: அன்புமணி ராமதாஸ் உள்பட ஏராளமானோர் பங்கேற்பு
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் மற்றும் லட்சுமி பங்காரு அடிகளார் ஆகியோரது, சதாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் மற்றும் லட்சுமி பங்காரு அடிகளார் ஆகியோரது, சதாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது. இதனையொட்டி, தம்பதியர் இருவரும் ரதத்தில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு, சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, பங்காரு அடிகளார், லட்சுமி பங்காரு அடிகளாரின் கழுத்தில் மாங்கல்யம் அணிந்தார். இந்நிகழ்ச்சியில், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அன்புமணி ராமதாஸ் - சௌமியா தம்பதியினர், இசையமைப்பாளர் தேவா, நடிகர் எஸ்.வி. சேகர் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, ஆசி பெற்றனர்.
Next Story