டி.என்.பி.எஸ்.சி. குருப்-1 தேர்வு முறைகேடு: சி.பி.ஐ.-க்கு மாற்ற கோரி தி.மு.க. வழக்கு

டிஎன்பிஎஸ்சி குருப்1 தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்ற கோரி திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி. குருப்-1 தேர்வு முறைகேடு: சி.பி.ஐ.-க்கு மாற்ற கோரி தி.மு.க. வழக்கு
x
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த  2015ம் ஆண்டு குரூப் 1 பதவிகளுக்கான தேர்வை நடத்தியது. இந்த தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி திருநங்கை ஸ்வப்னா என்பவர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இது குறித்து விசாரிக்க மத்திய குற்றப் பிரிவுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்றவர்களில், 62 பேர் இரு தனியார் பயிற்சி மையத்தில் படித்து, லஞ்சம் கொடுத்து அரசு வேலைக்கு சேர்ந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்