பந்தன் வங்கி புதிய கிளைகள் திறக்க தடை நீக்கம் : கட்டுப்பாடுகளை நீக்கி ரிசர்வ் வங்கி உத்தரவு

பந்தன் வங்கிக்கு விதித்திருந்த கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி நீக்கியுள்ளது.
பந்தன் வங்கி புதிய கிளைகள் திறக்க தடை நீக்கம் : கட்டுப்பாடுகளை நீக்கி ரிசர்வ் வங்கி உத்தரவு
x
பந்தன் வங்கிக்கு விதித்திருந்த கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி நீக்கியுள்ளது. வங்கி இல்லாத நிதி நிறுவனமாக தொடங்கப்பட்டு, பின்னர் வங்கியாக உருவான பந்தன் வங்கி, கட்டுப்பாடுகளை மீறியதாக 2018 ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்தது. அதன்படி அந்த வங்கி புதிய கிளைகளை திறப்பதை ரிசர்வ் வங்கி தடை செய்திருந்தது. அந்த நிறுவனத்தின் தலைவர் சந்திரசேகர் கோஷ் ஊதியத்தையும் நிறுத்தி வைத்திருந்தது. இந்த நிலையில், தற்போது அந்த தடைகள் நீக்கப்பட்டுள்ளன. அந்த வங்கிக்கு இந்தியா முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளதுடன், ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்