தொடர்ந்து மாயமான இருசக்கரவாகனங்கள்: சிசிடிவி மூலம் சிக்கிய கல்லூரி மாணவர்

சக மாணவர் பைக் உள்பட இரு சக்கர வாகனங்களை திருடி வந்த, கல்லூரி மாணவர், சிசிடிவி மூலம் சிக்கியுள்ளார்.
தொடர்ந்து மாயமான இருசக்கரவாகனங்கள்: சிசிடிவி மூலம் சிக்கிய கல்லூரி மாணவர்
x
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் செல்வின் பாக்யராஜ் என்ற மாணவரின் இரு சக்கர வாகனம் திருடு போனது. இதுகுறித்து நாசரேத் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் நாசரேத் பேருந்து நிலையத்தில் மிட்டாய் கடை வைத்துள்ள சுடலை என்பவரது இருசக்கரவாகனமும் மாயமானது. இதையடுத்து அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த‌தில், தூத்துக்குடியை சேர்ந்த ரத்தின ஹரீஸ் என்ற மாணவர், அந்த இரு பைக்குகளையும் திருடியது தெரிய வந்த‌து. இவர் பைக் திருடு போன அதே கல்லூரியில், மூன்றாம் ஆண்டு படித்து வருவது தெரிய வந்த‌தை அடுத்து அவரை கைதுசெய்த போலீசார், இருசக்கரவாகனங்களை பறிமுதல் செய்தனர். இவர் மீது தூத்துக்குடியில் கொள்ளை மற்றும் பைக் திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரிய வந்த‌து. 

Next Story

மேலும் செய்திகள்