பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞர் கைது

சென்னையில் பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.
பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞர் கைது
x
சென்னை அயனாவரத்தில் தன் கணவர், மகளுடன் வசித்து வருபவர் ஜோதி லட்சுமி. இவரது மூத்த மகள் குளித்துக் கொண்டிருக்கும் போது அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுநரான வினோத் தனது செல்போனில் படம் எடுப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவரது செல்போனை உடனே பறிமுதல் செய்த ஜோதிலட்சுமி, தன் கணவருடன் சென்று கண்டித்த போது வினோத் இருவருக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து வினோத் மீது அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில் போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரது செல்போனில் ஏராளமான பெண்களின் குளியலறை வீடியோக்கள் இருப்பதை பார்த்த போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்