பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக நிர்வாகி கைது

நாகர்கோவில் அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பாஜக நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக நிர்வாகி கைது
x
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த பிரேம் வினிஸ்டர் என்பவருக்கும் அவரது தம்பி பிரேம் அரிஸ்டாட்டிலுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதையடுத்து 2017ல் கூலிப்படை மூலம் தன் தம்பியை கொலை செய்தார் பிரேம் வினிஸ்டர். இந்த விவகாரத்தில் கூலிப்படையை சேர்ந்த ஈத்தமொழி வாலி என்ற சுயம்புலிங்கம் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். ஜாமீனில் வெளியே வந்த வாலி, அரிஸ்டாட்டிலின் தாய் பிரேமாவிடம் சென்று கொலை செய்தததற்கான பணத்தை கேட்டுள்ளார். 50 ஆயிரம் ரூபாய் பணத்தை தரக்கோரி வாலி மிரட்டல் விடுத்ததாக பிரேமா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு  செய்து வாலியை கைது செய்தனர். வாலி மீது கொலை உட்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் கடந்த ஆண்டு அவர் பாஜகவில் இணைந்தார் என்பதும் திருந்தி வாழ விரும்புவதாக தமிழக அரசுக்கு மனு அளித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்