ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கு முடித்து வைப்பு

துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்க கோரும் வழக்கை முடித்து வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
x
ஓ. பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக கொறடா சக்கரபாணி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே அமர்வு முன் நடைபெற்ற விசாரணையின் முடிவில் இந்த விவகாரத்தில் சபாநாயகர் உரிய முடிவை எடுப்பார் என நம்புவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். அதே சமயம் நடவடிக்கை எடுக்க கால வரம்பு நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும், உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. சபாநாயகர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட முடியாது  என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்