மயிலாடுதுறை - கடலூர் மின்சார ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது

நாகை மாவட்டம் மயிலாடுதுறை முதல் கடலூர் வரையிலான இருப்புப்பாதையின் மின்மயமாக்கல் பணி நிறைவடைந்ததை தொடர்ந்து, மின்சார ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை - கடலூர் மின்சார ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது
x
நாகை மாவட்டம் மயிலாடுதுறை முதல் கடலூர் வரையிலான இருப்புப்பாதையின் மின்மயமாக்கல் பணி நிறைவடைந்ததை தொடர்ந்து, மின்சார ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. நாடு முழுவதும் ரயில்வே இருப்புப்பாதைகளை மின்மயமாக்கும் திட்டத்தின் கீழ், விழுப்புரம் முதல் திருவாரூர் வரையிலான அகல ரயில் பாதையை மின்மயமாக்கும் பணி நடைபெற்று வருகிறது. பணிகள் நிறைவடைந்த நிலையில், இந்த சோதனை ஓட்டம் நடைபெற்றது. ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சான்றிதழ் அளித்த பின்பு, இந்த வழித்தடத்தில் மின்சார ரயில் இயக்குவது குறித்து ரயில்வே நிர்வாகம் முடிவு எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்