டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 ஏ தேர்வு முறைகேடு : வி.ஏ.ஓ, அரசு ஊழியரிடம் சிபிசிஐடி விசாரணை

குரூப் 2-ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அரசு ஊழியர் ஒருவரிடம், விசாரணை நடைபெற்று வருகிறது.
டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 ஏ தேர்வு முறைகேடு : வி.ஏ.ஓ, அரசு ஊழியரிடம் சிபிசிஐடி விசாரணை
x
சென்னையில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் ஆறாவது நாளாக நடைபெற்று வரும் விசாரணையில், இவர்கள் இருவரும் இடைத்தரகர்களாக செயல்பட்டது தெரியவந்துள்ளது. பல பேரிடம் பணம் பெற்று மோசடி செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். குரூப் 2 ஏ முறைகேடு வழக்கில் 4 பெண் அதிகாரிகள் மற்றும் காவல் துறையைச் சேர்ந்த காவலர் முத்துக்குமார், சித்தாண்டி, பூபதி உட்பட 13 அரசு ஊழியர்களை சிபிசிஐடி போலீசார் இதுவரை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக, ஓம்காந்தனை 5 நாள் காவலில் விசாரிக்க அனுமதி பெற்றுள்ள சிபிசிஐடி போலீசார், அவரை ராமேஸ்வரத்திற்கு அழைத்துச் செல்ல முடிவு செய்துள்ளனர். சம்பவம் நடந்த இடங்களுக்கு அவரை அழைத்துச் சென்று, எப்படி முறைகேடு நிகழ்த்தப்பட்டது என்பது தொடர்பாக, விளக்கிக் காட்டச் சொல்லவும் சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்