எஸ்ஐ வில்சன் கொலை வழக்கு - தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு மாற்றம்

சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
x
கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச்சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு எஸ்.ஐ. வில்சனை, தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்தனர். இதில் தொடர்புடையவர்கள், அவர்களுக்கு சிம் கார்டு வாங்கி கொடுத்த உதவியவர்கள் என பத்து பேரை, பெங்களூரு, காஞ்சிபுரம், சேலம் ஆகிய இடங்களில் கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.

பெங்களூருவில் பதுங்கியிருந்த அப்துல் சமீம் மற்றும் தவ்ஃபீக் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்களை கன்னியாகுமரி போலீசார் கைது செய்து அழைத்து வந்து கடந்த 20 நாட்களுக்கும்  மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு, தமிழக அரசின் பரிந்துரையின் பேரில், என்.ஐ.ஏ. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நாளை விசாரணை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.Next Story

மேலும் செய்திகள்