"சமுதாயத்தை உயர்ந்த நிலைக்கு மாணவர்கள் கொண்டு வர வேண்டும்" - தந்தி டி.வி. நிர்வாக இயக்குனர் ஆதவன் ஆதித்தன் பேச்சு

சமுதாயத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்று மாணவர்களுக்கு தந்தி டி.வி. நிர்வாக இயக்குனர் ஆதவன் ஆதித்தன் அறிவுறுத்தினார்
சமுதாயத்தை உயர்ந்த நிலைக்கு மாணவர்கள் கொண்டு வர வேண்டும் - தந்தி டி.வி. நிர்வாக இயக்குனர் ஆதவன் ஆதித்தன் பேச்சு
x
சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள நெல்லை நாடார் மெட்ரிக்குலேசன் உயர்நிலைப்பள்ளியில் 35 வது ஆண்டுவிழாக் கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் செங்கோட்டையன், த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன், தந்தி டிவி நிர்வாக இயக்குநர் ஆதவன் ஆதித்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பெயர் சூட்டப்பட்ட பள்ளி வளாகத்தை திறந்து வைத்து பள்ளிக்கான இதழை தந்தி டிவி நிர்வாக இயக்குநர் ஆதவன் ஆதித்யன் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மாணவர்களின் கலை நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. 

Next Story

மேலும் செய்திகள்