"குரூப் 4 தேர்வு விவகாரம் : 39 பேருக்கான புதிய தர வரிசை பட்டியல் வெளியீடு"

குரூப்-4 தேர்வு முறைகேட்டில் முதல் 100 இடங்களில் முறைகேடாக இடம்பெற்ற 39 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, புதிதாக 39 பேரின் பட்டியலை, தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
குரூப் 4 தேர்வு விவகாரம் : 39 பேருக்கான புதிய தர வரிசை பட்டியல் வெளியீடு
x
குரூப்-4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேரை தகுதி நீக்கம் செய்து டிஎன்பிஎஸ்சி நடவடிக்கை எடுத்திருந்தது. இவர்களுக்கு பதிலாக, தகுதி வாய்ந்தவர்கள் தர வரிசை பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. இதன்படி, புதிய தேர்வர்களின் பட்டியலை தேர்வாணையம் வெளியிட்டது. இந்த 39 பேரும், தங்களுடைய சான்றிதழ் நகல்களை, வரும் 7 ம் தேதிக்குள், இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தேர்வாணையம் அறிவுறுத்தி உள்ளது. 99 பேரில், மீதமுள்ள 60 பேரின் பட்டியல் இன்னும் வெளியாகவில்லை.

Next Story

மேலும் செய்திகள்