ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் : எந்தெந்த கடைகளில் ரேஷன் பொருட்களை பெறலாம்?

கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் எந்தெந்த நியாய விலைக் கடைகளில் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தில் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
x
அதன்படி, ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் வரும்1ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம், இடம்பெயர்ந்த தொழிலாளர்கள், பொது விநியோக திட்டத்தில், ரேஷன் கடைகளில், அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதை அரசு உறுதி செய்துள்ளது.

* கிராமப்புற பகுதிகளில், வருவாய் கிராமத்துக்குள் இருக்கும் குடும்ப அட்டைதாரர்கள், அந்த வருவாய் கிராமத்தில் செயல்படும் ரேஷன் கடைகளை தவிர்த்து, எந்த கடையிலும் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்  நகர்ப்புற பகுதிகளில், ஒரு வார்டுக்குள் இருக்கும் குடும்ப அட்டைதாரர்கள், அந்த வார்டுக்குள் செயல்படும் ரேஷன் கடைகளை தவிர்த்து, எந்த ஒரு ரேஷன் கடைகளிலும் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்இத்திட்டத்தின் கீழ் மின்னணு குடும்ப அட்டை இல்லாத, குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் ஆதார் அட்டை மற்றும் பதிவுசெய்யப்பட்ட கைபேசி எண் கொண்டு, ஒருமுறை கடவுச்சொல் உதவியுடன், தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பொதுவினியோக திட்டத்தில் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்

 * இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு நியாயவிலை கடைகளுக்கும் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த அத்தியாவசிய பொருட்களின் ஒதுக்கீடு, 5 சதவீதம் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.ஆன்-லைன் பில் மூலம் மட்டுமே அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்திட வேண்டும் என்றும்,

* இணைய வழியற்ற பில்கள் மூலம் அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்யதிடக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஒரு நியாய விலைக்கடையில் அரிசி பெற்ற ரேஷன் அட்டைதாரர்கள், அடுத்த நியாயவிலை கடைகளில் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பிற அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்

* தகுதியான குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் பொருட்கள் வாங்க வரும் நேரத்தில் பொருள் இருப்பு இல்லை என்ற காரணத்தினால், மறுப்பு தெரிவித்து அனுப்பி விடக்கூடாது

* சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் இடங்களில், நியாய விலை கடை மேலாளர், மேலாண் இயக்குனர் மூலமாக காவல்துறையின் பாதுகாப்பு பெற்றிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்