மேன் vs வைல்ட் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த்

பிரதமர் மோடியை தொடர்ந்து நடிகர் ரஜினியும் "மேன் Vs வைல்ட்" நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதற்கான படப்பிடிப்பு கர்நாடக கேரள எல்லையான பந்திப்பூரில் துவங்கியுள்ளது.
x
சூப்பர் ஸ்டாராக திரையில் ஜொலிக்கும் நடிகர் ரஜினிகாந்த் சின்னத்திரையில் சாகசம் செய்யத் தயாராகி வருகிறார். இதற்காக மேன் vs வைல்ட் என்ற நிகழ்ச்சியில் ரஜினி பங்கேற்றுள்ளார். கர்நாடக - கேரள எல்லையான பந்திப்பூர் வனப்பகுதியில் இதற்கான படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதற்காக 18 பேர் கொண்ட குழு வனப்பகுதியில் முகாமிட்டுள்ளது. இவர்களின் படப்பிடிப்பிற்காக கர்நாடக வனத்துறை வாகனம் வழங்கி உள்ளது. தொகுப்பாளர் பியர் கிரில்ஸ் உடன் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பல்வேறு சாகசங்களை நிகழ்த்த உள்ளார். தொடர்ந்து 3 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் தற்போது ரஜினிகாந்தும் கலந்து கொண்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்