ஈரோட்டில் ரூ. 300 கோடிக்கு பிட்காயின் மோசடி

ஈரோட்டில் பிட்காயின் மோசடியில், 300 கோடி ரூபாய்க்கு மேல் ஏமாற்றியதாக, பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு அளித்துள்ளனர்
x
ஆன்லைன் மோசடிகளில் ஒன்றான, பிட்காயின் மோசடியில் ஈடுபட்டு,  300 கோடி ரூபாய் வரை ஏமாற்றியதாக, ஈரோடு  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம், பாதிக்கப்பட்டவர்கள், புகார் மனு அளித்துள்ளனர். அதில், ராஜதுரை, பன்னீர்செல்வம், மரியசெல்வம் ஆகியோர், மோசடியில் ஈடுபட்டதாக குறிப்பிட்டுள்ளனர். மேலும், ஆயிரக்கணக்கானோரை ஏமாற்றிய, அவர்கள்  நடவடிக்கை எடுத்து, தங்களின் பணத்தையும், தங்களை நம்பி பணத்தை முதலீடு செய்தவர்களின் பணத்தையும் மீட்டுத் தரக்கோரி, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் முகவர்கள் புகார் அளித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்