சாராயம் காய்ச்ச வேண்டாம் - எஸ்.பி. அறிவுரை

அறிவை, மக்கள் பயனுறும் வகையில் பயன்படுத்துங்கள்
சாராயம் காய்ச்ச வேண்டாம் - எஸ்.பி. அறிவுரை
x
சாராயம் காய்ச்சும் அறிவை மாற்றுவழியில் பயன்படுத்தினால், கிராமம் வளர்ச்சி பெறும் என மனம் திருந்தியவர்களுக்கான பாராட்டு விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசினார். ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சாம்பசிவபுரம் மலை கிராமத்தில் வழிவழியாக சாராயம் காய்ச்சி, அதை சுற்றுப்பகுதிகளில் விற்பனை செய்து வந்துள்ளனர். இதைத் தொடர்ந்து, மாவட்ட எஸ்.பி.யாக பொறுப்பேற்ற மயில்வாகனன், அதிரடி நடவடிக்கையால், அதை தடுத்து நிறுத்தி அழித்தார். இதனிடையே, சாராயம் காய்ச்சிய 52 பேர் மனம் திருந்தியதாக கூறி, மாற்று வருமானத்துக்கு ஏற்பாடு செய்துதர கோரினர்.  பால்,கரும்பு வியாபாரம் செய்யலாம் என்ற அவர், இளைஞர்கள் அதை செய்துகாட்ட வேண்டும் என்றார். 

Next Story

மேலும் செய்திகள்