"சி.ஏ.ஏ.,காவலர் வில்சன் கொலை செய்யப்பட்ட விவகாரம் : இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் இணைந்து போராட்டம்"

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் சி.ஏ.ஏ. சட்ட திருத்தம் மற்றும் போலீஸ் அதிகாரி வில்சன் சுட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்தும் சிறுபான்மை அமைப்புகள் சார்பாக போராட்டம் நடைபெற்றது
சி.ஏ.ஏ.,காவலர் வில்சன் கொலை செய்யப்பட்ட விவகாரம் : இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் இணைந்து போராட்டம்
x
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய கிறிஸ்தவ பேரவை, முஸ்லீம் ஜமாத் கூட்டமைப்பு உள்ளிட்ட பல அமைப்பினர் பங்கேற்றனர். அப்போது சி.ஏ.ஏ. சட்டத்திற்கு எதிராகவும், காவல் அதிகாரி வில்சன் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இந்தப் போராட்டத்தில்  5 சட்டமன்ற உறுப்பினர்கள், ஒரு மக்களவை உறுப்பினர், போராயர்கள், இஸ்லாமிய மதகுருமார்கள் உட்பட பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று பேரணியாக சென்றனர். இந்தப் போராட்டம் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு சாலைகள் முடப்பட்டன. 

Next Story

மேலும் செய்திகள்