"பழனிபாபா நினைவு தினத்தில் அரசியல் விழிப்புணர்வு கூட்டம் : நிபந்தனைகளுடன் அனுமதி அளித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை"

கோரிப்பாளையம் மசூதி அருகே கூட்டத்துக்கு அனுமதி
பழனிபாபா நினைவு தினத்தில் அரசியல் விழிப்புணர்வு கூட்டம் : நிபந்தனைகளுடன் அனுமதி அளித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
x
இஸ்லாமிய செயற்பாட்டாளரான மறைந்த பழனிபாபாவின், நினைவு தின அனுசரிப்பு பொதுக்கூட்டம் நடத்த, பல்வேறு நிபந்தனைகளுடன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி அளித்துள்ளது. மதுரையைச் சேர்ந்த முகமது ரபீக் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கோரிப்பாளையத்தில் கூட்டம் நடத்த அனுமதி கோரியதாகவும், காவல்துறை கண்டு கொள்ளவில்லை என்றும் கூறியிருந்தார். ஜனவரி 28ஆம் தேதி கோரிப்பாளையம் பள்ளி வாசல் அருகே அரசியல் விழிப்புணர்வு கூட்டம் நடத்த அனுமதி கோரினார். இதை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா,  பொதுக் கூட்டத்துக்கு அனுமதி அளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்