"அடித்து நொறுக்கப்பட்ட செங்கல்பட்டு சுங்கச் சாவடி : கட்டணம் இன்றி வாகனங்களை அனுமதித்த போலீசார்"

செங்கல்பட்டு சுங்கச் சாவடியை வாகன ஓட்டிகள் அடித்து நொறுக்கியதால், கட்டணம் பெறாமல் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டது.
அடித்து நொறுக்கப்பட்ட செங்கல்பட்டு சுங்கச் சாவடி : கட்டணம் இன்றி வாகனங்களை அனுமதித்த போலீசார்
x
சென்னையில் இருந்து சென்ற அரசுப் பேருந்தை நிறுத்திய சுங்கச் சாவடி ஊழியர்கள், கட்டணம் கேட்டுள்ளனர். ஏற்கனவே கட்டணம் செலுத்திவிட்டதாக ஓட்டுனர் கூறிய நிலையில், இருதரப்புக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது. அப்போது, சுங்கச் சாவடி ஊழியர்கள், பேருந்து ஓட்டுநரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அவர், சுங்கச் சாவடியை மறித்து பேருந்தை ​நிறுத்தியதால், 4 கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் தேங்கியுள்ளது. சம்பவம் அறிந்து வந்த வாகன ஓட்டிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர், சுங்கச் சாவடியை அடித்து நொறுக்கியுள்ளனர். தகவலின் பேரில் வந்த போலீசார், போக்குவரத்தை சீர் செய்து, இரவு 9 மணி வரை கட்டணமின்றி வாகனங்களை அனுப்பி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்