"11-வது இந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சியை ஒட்டி ஏற்பாடு : 2 ஆயிரம் மாணவிகள் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி"

இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியை ஒட்டி சென்னையில் 2 ஆயிரம் மாணவிகள் பங்கேற்ற பிரமாண்ட பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
11-வது இந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சியை ஒட்டி ஏற்பாடு : 2 ஆயிரம் மாணவிகள் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி
x
11-வது இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி சென்னை வேளச்சேரியில் உள்ள  குருநானக் கல்லூரியில் வரும் 28 ஆம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி பல்வேறு முன்னோட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக 2 ஆயிரம் மாணவிகள் பங்கேற்ற பிரமாண்ட பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. 

சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பரதமுனி சம்ஸ்கார நடனம் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த பரதநாட்டிய நிகழ்ச்சியை, நடனகலைஞர்  டாக்டர் பத்மா சுப்ரமணியம் வடிவமைத்திருந்தார். ராஜலெட்சுமி தேர்ந்தெடுத்து ராம்ஜி இசையமைத்த பாடல்களுக்கு, பிரபல நடன கலைஞர் சோனால் மான்சிங் முன்னிலையில் 2 ஆயிரம் மாணவிகள் பரத நாட்டியமாடி பார்வையாளர்களை பிரமிக்க வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்