"குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக தீர்மானம்"

"தீர்மானம் நிறைவேற்றிய ராதாநல்லூர் ஊராட்சி தலைவர்"
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக தீர்மானம்
x
நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த ராதாநல்லூரில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 71வது குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் முன் மொழியப்பட்டன. அதில் ஒன்றாக பல்வேறு தரப்பும் எதிர்ப்பு தெரிவிக்கும், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் கொண்டு வரப்பட்டது. கிராம சபையின் அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக தீர்மானத்துக்கு ஆதரவளித்து நிறைவேற்றினர். இந்த ஊராட்சியின் தலைவராக பாஜக பிரமுகர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்