குடியரசு தினம் : ஆளுநர் தேனீர் விருந்து - முதலமைச்சர், தலைமை நீதிபதி உள்ளிட்டோர் பங்கேற்பு

குடியரசு தினத்தையொட்டி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேனீர் விருந்து வழங்கினார்.
குடியரசு தினம் : ஆளுநர் தேனீர் விருந்து - முதலமைச்சர், தலைமை நீதிபதி உள்ளிட்டோர் பங்கேற்பு
x
குடியரசு தினத்தையொட்டி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேனீர் விருந்து வழங்கினார். கிண்டி ராஜ்பவனில் நடைபெற்ற தேனீர் விருந்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, நீதிபதிகள், அமைச்சர்கள், தலைமை செயலாளர், காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். தொடர்ந்து, சிறப்பாக கொடிநாள் வசூல் செய்த காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்களுக்கும், சென்னை, ஈரோடு மாநகராட்சி ஆணையர்களுக்கும் விருது  வழங்கப்பட்டது. அதேபோன்று, குடியரசு தின கலைநிகழ்ச்சி மற்றும் அலங்கார ஊர்திகள் பிரிவில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது. இறுதியாக, வீரதீர சாகசங்கள் செய்த காவலர்களுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்