"தமிழ்தான் தமக்கு பெருமை தரும் மொழி" - நடிகர் கமல்

தமிழ்தான் தமக்கு பெருமை தரும் மொழி என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
x
தமிழ்தான் தமக்கு பெருமை தரும் மொழி என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில்,  83 என்ற திரைப்படத்தின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் தமிழ் வெளியீட்டு உரிமையை ராஜ்கமல் நிறுவனம் பெற்றுள்ளதால்,  இந்த நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன்  பங்கேற்றார். அப்போது பேசிய அவர், கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்தை தமது படங்களில் நடிக்க வைக்க முயற்சித்ததாக கூறினார். அவெஞ்சர்ஸ் படத்தின் அசாத்தியசாலிகளைப் போல, கபில்தேவும் அவருடன் இருந்த வீரர்களும், 83 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் போது  செயல்பட்டதாகவும் கமல்ஹாசன் புகழாரம் சூட்டினார். 


Next Story

மேலும் செய்திகள்